உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவர் கைது

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவர் கைது

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே இருவேறு இடங்களில் டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் பகுதிகளில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பதாக எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று காலை பெண்ணாடம் பகுதியில் சோதனை செய்தனர்.மாளிகைக்கோட்டம் டாஸ்மாக் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்ற ராஜேந்திரப்பட்டினம் பாரதிராஜா, 31, பெண்ணாடம், வடக்குரத வீதி பிரபு, 36; பெ.பொன்னேரி டாஸ்மாக் அருகே மதுபாட்டில் விற்ற பெண்ணாடம், சிலுப்பனூர் சாலை தெருவைச் சேர்ந்த மணி, 60, ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து 152 மதுபாட்டில்கள், 4 ஆயிரத்து 440 ரூபாய் பறிமுதல் செய்து, பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி