உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டித்தர பேரூராட்சி கவுன்சிலர் கோரிக்கை

வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டித்தர பேரூராட்சி கவுன்சிலர் கோரிக்கை

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில், வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டித்தர கலெக்டருக்கு, பேரூராட்சி கவுன்சிலர் அருள்முருகன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.அவரது மனு;பரங்கிப்பேட்டை வி.ஏ.ஓ., அலுவலகம் தற்போது, பயன்படுத்த முடியாததால், தற்போது பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வருகிறது. பள்ளி கட்டடமும் சேதமடைந்துள்ளதால் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்றுவர அச்சமடைந்து வருகின்றனர். ஊரின் மையப்பகுதியான கச்சேரி தெருவில் வருவாய் துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு, வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டிக்கொடுத்தால், பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும். எனவே, வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை