உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காதலர் தினத்தில் இதய வடிவில் ஒளிர்ந்த டிராபிக் சிக்னல்

காதலர் தினத்தில் இதய வடிவில் ஒளிர்ந்த டிராபிக் சிக்னல்

கடலுார் : கடலுார் பாரதி சாலையிலுள்ள டிராபிக் சிக்னல் இதய வடிவில் ஒளிர்ந்தது, பொதுமக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.கடலுார் பாரதி சாலையில் உள்ள பீச்ரோடு சிக்னல் நீண்ட நாட்களாக பழுதடைந்திருந்தது. அண்மையில் சரிசெய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் இயங்க துவங்கியது. நேற்று காலை சிக்னலில் உள்ள சிவப்பு நிற விளக்கு இதயம் வடிவில் ஒளிர்ந்தது பயணிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உலக காதலர் தினமான நேற்று டிராபிக் சிக்னல் இதய வடிவில் ஒளிர்ந்தது இளைஞர்களிடையே மகிழ்ச்சியையும், பொதுமக்களிடையே முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியது. சர்வதேச டிராபிக் சிக்னல் தினம், இதய தினம் மற்றும் விபத்தில்லா பயணங்கள் போன்ற காரணங்களுக்காக சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இதுபோல டிராபிக் சிக்னல்கள் விழிப்புணர்வுக்காக இதய வடிவில் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடலுாரில் என்ன காரணத்திற்காக டிராபிக் சிக்னல்கள் இதய வடிவில் ஒளிர்ந்தது என்பது டிராபிக் போலீசாருக்கே தெரியவில்லை. காதலர் தினத்தன்று டிராபிக் சிக்னல் இதய வடிவில் ஒளிர்ந்ததை பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தபடியே சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை