உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கணினி பொறியியல் துறை சார்பில், 'டேஷ் மூலம் தரவுத்தள செயலி உருவாக்கம்' என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் நடந்தது.துறைத் தலைவர் பவானி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்புனிதா வரவேற்றார். பொறியியல் புல முதல்வர் கார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி பயிலரங்கத்தை துவக்கிவைத்தார்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்பணிபுரியும் லிவின்நெக்டர், ஆனந்த்சங்கர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளிருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர்சத்தியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ராதிகாராண, மீனா, அபர்ணா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ