உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கூனங்குறிச்சி கிராம விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி நடந்தது.கம்மாபுரம் வட்டார வேளாண் துறை சார்பில், அனைத்து கிராம கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி நடந்தது. உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் பாரதிகுமார் பயிற்சி அளித்தார்.அதில், தமிழக அரசின் மானியங்கள், வேர்க்கடலை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து வேளாண் வளர்ச்சிக்குழு மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி தரப்பட்டது. துணை வேளாண் அலுவலர் பிரான்சிஸ், உதவி வேளாண் அலுவலர் பாக்யராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி மேலாளர்கள் ரமேஷ், பஞ்சமூர்த்தி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை