உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாராயம் பதுக்கிய இருவர் கைது

சாராயம் பதுக்கிய இருவர் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே புதுச்சேரி சாராயம் பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒதியடிக்குப்பம் கிழக்கு தெரு முருகன்,34, அன்புதாசன்,50; இருவரும் வீட்டில் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து,நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, முருகன்,அன்புதாசன் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ