உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்தல் இருவர் கைது

மணல் கடத்தல் இருவர் கைது

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மணல் கடத்திய 3 மாட்டு வண்டி கள் பறிமுதல் செய்து இருவரை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் கெடிலம் ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் கடத்ததுவதாக வந்த தகவலின்பேரில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ரோந்து சென்றனர்.அப்போது, ஆற்றில் 3 மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய பனிக்கன்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த ஸ்டீபன் ரோசாரியோ,32;, ஜான்பெனடிக்,24; ஆகிய இருவரை கைது செய்தனர். 3 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான மேலும் மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ