உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது பாட்டில் விற்ற இருவர் கைது

மது பாட்டில் விற்ற இருவர் கைது

மந்தாரக்குப்பம் : ஊமங்கலம் பகுதியில் மது பாட்டில்கள் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.மந்தாரக்குப்பம் அருகே வடக்கிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் ஊமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வடக்கிருப்பு டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் செடுத்தான்குப்பம் பகுதியை சேர்ந்த சங்கர், 37, வடக்கிருப்பை சேர்ந்த செல்வபெருமாள், 36; என, தெரிந்தது. இருவர் மீதும் ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை