உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், மூன்றாவது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணாமலை நகர் தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் முத்து வேலாயுதம், செல்வராஜ், துரை அசோகன், பரணி, செல்லபாலு மற்றும் தனசேகர், காயத்திரி ஜான்கிருஸ்டி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகை, பி.எச்டி., முனைவர் பட்ட ஊக்கத் தொகை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக அயல் பணியிட ஆசிரியர்களை ஆங்காங்கே உள்ளெடுப்பு செய்தல் மற்றும் பல்கலைக்கழக துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அயல் பணியிட ஆசிரியர்களை திரும்ப பெற வேண்டும். காலமுறை பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை