உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் பேச்சுவார்த்தை தோல்வி

வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் பேச்சுவார்த்தை தோல்வி

கடலுார்: கடலுாரில் கிராம நிர்வாக அலுலர்களின் தொடர் போராட்ட விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், தொண்டமாநத்தம் கிராம நிர்வாக அலுவலரை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய கோரி, கடந்த 22ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இப்பிரச்னை தொடர்பாக கடலுாரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. உடன்பாடு ஏற்படாததால் தோல்வியில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ