உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., விளம்பரம் அழிப்பு கடலுார் அருகே பரபரப்பு

வி.சி., விளம்பரம் அழிப்பு கடலுார் அருகே பரபரப்பு

கடலுார் : கடலுார் அருகே வி.சி., கட்சி சுவர் விளம்பரத்தை மர்ம நபர்கள் அழித்ததால் பரபரப்பு நிலவியது.கடலுார் அடுத்த சங்கொலிகுப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள சுவரில், வரும் 2ம் தேதி நடைபெற உள்ள வி.சி., கட்சி மகளிர் மாநாட்டிற்காக அக்கட்சியினர் சுவர் விளம்பரம் எழுதியிருந்தனர்.நேற்று அதிகாலை அந்த சுவர் விளம்பரத்தை மர்ம நபர்கள் அழித்துள்ளனர்.இதையறிந்த வி.சி., கட்சியினர், கடலுார் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சில தினங்களுக்கு முன் செம்மங்குப்பத்தில் வி.சி., கட்சி கொடியை மர்ம நபர்கள் கிழித்த சம்பவம் நடந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு யாரும் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என காவல் துறை சார்பில் நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ