உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்நடை மருத்துவ வாகனம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கால்நடை மருத்துவ வாகனம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கடலுார், : கடலுார் சட்டசபை தொகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை மருத்துவ வாகனம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் தினந்தோறும் 2 கிராமங்களில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறும். மேலும், கால்நடைகளுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் துவக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், நிர்வாகிகள் மூர்த்தி, சதீஷ், உமாபதி, சிந்துநாதன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை