உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காடாம்புலியூர் சார் பதிவாளர் ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு

காடாம்புலியூர் சார் பதிவாளர் ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு

பண்ருட்டி: காடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் கடலுார் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சத்தியராஜ் மேற்பார்வையில், மாவட்ட ஆய்வு குழு ஆய்வாளர் சுஜாதா தலைமையில் கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத பணம் ரூ. 2 லட்சத்து 17 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை