உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விநாயகர் சதுர்த்தி விழா பந்தல் கால் நடப்பட்டது

விநாயகர் சதுர்த்தி விழா பந்தல் கால் நடப்பட்டது

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கடை வீதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் விநாயாகர் சதுர்த்தி விழாயொட்டி பந்தல்கால் நடும் நிகழ்வு நடந்தது.மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் 31ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடக்க உள்ளது. அதையொட்டி, வரும் 7ம் தேதி காலை கணபதி ேஹாமம், மகா கணபதி பிரதிஷ்டை மற்றும் வெள்ளி காப்பு அலங்காரம், 8ம் தேதி சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை, 9ம் தேதி சிறப்பு பூஜை, சிறப்பு பட்டிமன்றம், 10ம் தேதி சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் இன்னிசை கச்சேரி நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 11ம் தேதி 1,008 கொழுக்கட்டையுடன் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, மாலை 6:00 மணியளவில் மலர் அலங்காரம், வான வேடிக்கையுடன் விநாயகர் வீதியுலா புறப்பட்டு வடக்கு வெள்ளுர் காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் விஜர்சனம் செய்யப்படும். இதற்காக பந்தல் அமைக்க கால் நடும் நிகழ்வு நேற்று காலை நடந்தது. வெற்றி விநாயகர் விழா கமிட்டியினர், இந்து முன்னணியினர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ