உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார்: கடலுாரில் தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, கண்தான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஹீரியன் ரவிக்குமார், துணை இயக்குநர் பொற்கொடி முன்னிலை வகித்தனர். இதில், கண்தானம் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய சாலைகள் வழியாக செவிலியர்கள், செவிலியர் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.மாவட்ட திட்ட மேலாளர் கேசவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ