உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருங்குழி அரசு பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு

கருங்குழி அரசு பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு

மந்தாரக்குப்பம் : கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழகத்தில் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப் தலைமை தாங்கினார். பள்ளி புரவலர் வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் மற்றும் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ராஜமாரியப்பன் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு, சீருடைகள் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ