உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவீரப்பட்டு உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலை பணிகள் துவங்குவது எப்போது

நடுவீரப்பட்டு உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலை பணிகள் துவங்குவது எப்போது

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலைக்கான இடம் கையப்படுத்தும் பணி துவங்காததால் குறிப்பிட்ட தேதிக்குள் பாலம் கட்டுமான பணி நிறைவு பெறுவதில் காலதாமதம் ஆகும் நிலை உள்ளது.நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் கெடிலம் ஆற்றில் உள்ள உயர்மட்ட பாலம் பழுதடைந்தது.இதனால் கடந்த 2023 ம்ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.19 கோடியே 62 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.தற்போது பாலத்தில் 6 கண்களில் 4 கண்கள் தளம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. மீதி உள்ள 2 கண்கள் கட்டும் பணி துவங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழையில் வேலைகள் சற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலைக்கான இடம் கையப்படுத்தும் பணி துவங்கவில்லை.இதனால் பாலத்தின் வடக்கு பகுதியில் ஒரு புறம் மட்டும் தடுப்பு கட்டைக்கான பில்லர் போடும் பணிகள் நடந்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் பாலத்தின் இருபுறமும் உள்ள நிலம் மற்றும் மரம் அறுக்கும் மில்களில் இடத்தினை அளவீடு செய்து,கொடி மட்டும் நடப்பட்டுள்ளது.இந்த இடங்களை கையப்படுத்தினால் தான் மீதி உள்ள பணிகளை முடித்து ஒப்பந்த முடிவு தேதியான நவம்பர் 2025க்குள் கட்டி முடிக்கப்பட்டு திறக்க முடியும்.ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, பாலத்தின் இணைப்பு சாலைக்கான பணிகளை துவங்கி இடம் கையப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை