மது விற்ற பெண் கைது
பெண்ணாடம் : பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, செம்பேரி, மேலத்தெருவில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த கதிரேசன் மனைவி அஞ்சலை, 56, என்பவர் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. போலீசார் பறிமுதல் செய்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, அஞ்சலையை கைது செய்தனர்.