உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

மின் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

புதுச்சத்திரம் : மண் குவாரியை தடை செய்யக்கோரி, மின் டவரில் ஏறி கூலி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுாரை சேர்ந்தவர் ரமேஷ், 42; கூலித்தொழிலாளி. இவர், அத்தியாநல்லுாரியில் இயங்கும் மண் குவாரியால், பாதிப்பு ஏற்படுவதாகவும், தடை செய்யக்கோரியும், அத்தியநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா, பரங்கிப்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ரமேஷிடம் பேசி சமாதனம் செய்தனர். அதையடுத்து அவர் கீழே இறங்கினார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை