உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேத்தியாத்தோப்பு ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்

சேத்தியாத்தோப்பு ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பருவ கால தொழிலாளர்கள் தொடர் பணி வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 110 பருவ கால தொழிலாளர்கள் உள்ளனர். ஆலை அரவை துவங்க இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆலையில் உள்ள இயந்திரங்கள் சுத்தம் செய்யும் பணிகளை பருவ கால தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த மாதம் 1ம் தேதியிலிருந்து பருவகால தொழிலாளர்களுக்கு, இரு பிரிவுகளாக பிரித்து சுழற்ச்சி முறையில் 15 நாட்கள் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தொடர் பணி வழங்க பருவ கால தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இம்மாதம் 1ம் தேதி முதல் தொடர் பணி வழங்குவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொடர் பணி வழங்காமல், தினசரி வேலைக்கு வெளி ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளதாக தெரிகிறது.இதனை கண்டித்து நேற்று வேலைக்கு சென்ற பருவகால தொழிலாளர்கள் கால காப்பக அலுவலகம் முன்பாக அமர்ந்து காலை 8.00 மணிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராததால், போராட்டம் தொடரும் என, கூறிவிட்டு, மாலை 4:00 மணியளவில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை