உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / படைப்புழு தாக்குதல் மேலாண்மை பயிற்சி

படைப்புழு தாக்குதல் மேலாண்மை பயிற்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தனுக்கா நிறுவனம் சார்பில், நல்லுார் அடுத்த பெரியநெசலுார் கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்த வெளிவளாக பயிற்சி நடந்தது.கூட்டத்திற்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள்கள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர் ரகங்கள், விதை உற்பத்தி செய்யும் முறை, மக்காச்சோளத்தில் படைப்புழு அதன் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.மேலும், ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. கோடை உழவு விதை நேர்த்தி, மண் வள மேம்பாடு ஆகியவை குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கினர்.இந்த பயிற்சியில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி