மேலும் செய்திகள்
சிதம்பரம் பல்கலையில் தேசிய நுாலகர் தின விழா
19-Aug-2024
வேலைவாய்ப்பு முகாம்
27-Aug-2024
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயிற்சி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்ககம் சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது.பல்கலைக்கழக உளவி யல் துறையில் நடந்த பயிற்சி பட்டறைக்கு, தொழில் முனைவோர் இயக்கக இயக்குனர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். வேலை வாய்ப்பு அலுவலர் நீலகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கல்வி புல முதல்வர் குலசேகரபிள்ளை பேசினார். துணை இயக்குனர் பத்மநாபன் பாராட்டுரை வழங்கினார்.மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் சிவகுமார் நேர்காணல் திறன்கள் குறித்தும், வணிக நிர்வாக பேராசிரியர் நாராயணன் தொழில் முனைவு தலைப்பிலும் பேசினர்.உளவியல் துறைத்தலை வர் கோவிந்த, துறை பேராசிரியர்கள், மற்றும் இறுதியாண்டு மருத்துவ உளவியல் மற்றும் பயன்பாட்டு உளவியல் மாணவர்கள் 60 பேர் பங்கேற்றனர்.
19-Aug-2024
27-Aug-2024