உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 10 மணி நேரம் மின்தடை கொட்டும் மழையில் மறியல்

10 மணி நேரம் மின்தடை கொட்டும் மழையில் மறியல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 10 மணி நேரமாக மின்சாரம் இல்லாததால், ஆத்திரமடைந்த மக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பூதாமூர், அம்மன் கோவில் தெரு, ஏனாதி மேடு, பூதாமூர் புறவழிச்சாலை பகுதிகளில் நேற்று காலை 10:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 7:00 மணி வரை மின்சாரம் வராததால், ஆத்திரமடைந்த பெண்கள், கொட்டு மழையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். மின்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், இரவு 8:00 மணிக்கு விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் மறியல் செய்தனர். மின்துறை அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, 8:15 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை