உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருப்பசாமி கோவிலில் 10,008 பால்குட ஊர்வலம்

கருப்பசாமி கோவிலில் 10,008 பால்குட ஊர்வலம்

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு, விநாயகபுரம் கருப்பசாமி சாமி கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு விநாயகபுரம் கருப்பசாமி சாமி கோவிலில் 25ம் ஆண்டு ஆடி அமாவாசை பெருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 21ம் வீதியுலா, 23ம் தேதி பெரியாண்டவர், அங்காள பரமேஸ்வரி திருக்கல்யாணம், கருப்பசாமிக்கு ஆடு, கோழி, பலி கொடுக்கும் பூஜை நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு வெள்ளாறுராஜன் வாய்க்கால் 25 கண்மதகு அருகில் கருப்பசாமி கோவில் அறங்காவலர் கருப்பசாமி ஆறுமுகம் தலைமையில் பக்தர்கள் 10,008 பால்குடங்கள் சுமந்து கருப்புசாமி கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து, விநாயகபுரம் கருப்பசாமிக்கு மகா அபிேஷகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மதியம் கருப்பசாமி சித்தர் பீட அனைத்து வழிபாடு மன்றம் முன்னிலையில் மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ