உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவீரப்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்

நடுவீரப்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து 12 பேர் காயமடைந்தனர்.நெய்வேலி அடுத்த வடக்குமேலுார் பகு தியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கிழக்கு ராமாபுரத்தில் நடக்கும் தனது சகோதரியின் வீடு கிரஹப்பிரவேசத்திற்கு அப்பகுதியை சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை டூரிஸ்ட் வேனில் (டி.என்.37 சி.ஜே 7294) நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அழைத்து சென் றார். வேனை வடக்கு மேலுார் மகேஷ், 37, என்பவர் ஓட்டினார்.பத்திரக்கோட்டை அருகே வந்தபோது வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்த கமலக்கண்ணன், 41; வேலுசாமி, 35; வெங்கடாசலம், 64; திருஞானவள்ளி, 62; லட்சுமிகாந்தி, 47; வெங்கடேசன், 52; சிவரஞ்சனி, 18; பெருமாள், 63; செல்வராணி, 54; வள்ளி, 62; ரெங்கம்மாள், 57; சந்திரா,56; ஆகிய 12 பேரும் காயமடைந்தனர்.அனைவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டனர். விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி