மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
14-Oct-2024
கடலுார்: கடலுாரில் நேற்று காலை திடீரென பெய்த மழையால், சாலையோர பட்டாசு கடை, துணி வியாபாரிகள் அவதியடைந்தனர்.தென்னிந்திய கிழக்கு கடலோர பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று 31ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலுாரில் நேற்று முன்தினம் மாலை திடீரென கனமழை பெய்தது. இதையடுத்து, நேற்று காலை கடலுார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில், கடலுாரில் 11, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் 13.2, காட்டுமன்னார் கோவிலில் 20, எஸ்.ஆர்.சி., குடிதாங்கியில் 10, லால்பேட்டையில் 10, ஸ்ரீமுஷ்ணத்தில் 7.2 மி.மீ., என மொத்தம் 71.40 மி.மீ., மழை பதிவாகியது.திடீரென மழை பெய்ததால், கடலுாரில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரத்தில் பட்டாசு கடைகள், துணிகள் விற்பனை செய்தவர்கள் கடும் அவதியடைந்தனர்.
14-Oct-2024