1,462 டன் யூரியா ரயிலில் வருகை
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு 1,462 டன் யூரியா உர மூட்டைகள் வந்திறங்கின.சென்னை மணலியில் உள்ள விஜய் யூரியா நிறுவனத்தில் இருந்து 1,462 டன் உர மூட்டைகள், 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் நேற்று காலை வந்தன. இவற்றை கடலுார், பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.