உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆற்றுத் திருவிழாவில் 1,500 போலீசார் பாதுகாப்பு: கடலுாரில் எஸ்.பி., ஆய்வு

ஆற்றுத் திருவிழாவில் 1,500 போலீசார் பாதுகாப்பு: கடலுாரில் எஸ்.பி., ஆய்வு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கடலுார் மஞ்சக்குப்பம், உண்ணாமலைசெட்டிச்சாவடி, அழகியநத்தம், கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், எனதிரிமங்கலம், எலந்தம்பட்டு, உளுத்தம்பட்டு, பைத்தாம்பாடி, மேல்பட்டாம்பாக்கம், விஸ்வநாதபுரம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, நத்தப்பட்டு உள்ளிட்ட பெண்ணையாற்றிலும், பனிக்கன்குப்பம், கொக்குப்பாளையம், சிறுவத்துார், பண்ருட்டி உள்ளிட்ட கெடிலம் ஆற்றிலும், பெருமாள் ஏரி உள்ளிட்ட இடங்களில் இன்று (18ம் தேதி) ஆற்றுத் திருவிழா நடக்கிறது. சுவாமிகள் ஊர்வலமாக வந்து தீர்த்தவாரி நடைபெறும். இதனை முன்னிட்டு எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், நல்லதுரை ஆகியோர் தலைமையில் 9 டி.எஸ்.பி.,க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்கின்றனர்.போக்குவரத்து போலீசார், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.ஆற்றில் அதிக நீர் உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், மீன்பிடிக்கவும், செல்பி எடுக்கவும் இறங்கக் கூடாது. மது அருந்தி விட்டு வாகனங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலுார் பெண்ணையாற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வாகனங்கள் நிறுத்த வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். டி.எஸ்.பி., ரூபன்குமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை