உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 1.78 லட்சம் மனுக்களுக்கு விரைவில் தீர்வு; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

1.78 லட்சம் மனுக்களுக்கு விரைவில் தீர்வு; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

வடலுார்; வடலுார் அடுத்த கருங்குழி அரசு உயர்நிலை பள்ளியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். கலெக்டர்சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை சார்பில், 77 பயனாளிகளுக்கு ரூ. 7.5 லட்சம் மதிப்பு வீட்டுமனை பட்டா, பட்டா மாற்ற ஆணைகள், புதிய ரேஷன் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பின், அவர் பேசுகையில், 'கடலுார் மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில், 130 முகாம்கள், ஊரக பகுதிகளில், 248 முகாம்கள் என, மொத்தம், 378 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டன. இதில், இதுவரை 282 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. முகாமில், 1.78 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணப்படும். மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும், 4.5 லட்சம் குடும்ப தலைவிகள் பெற்று வருகின்றனர். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் இ-சேவை வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு, பெறப்படும் மனுக்கள் முறையாக பதிவு செய்து, பரிசீலனை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறையால் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், நகராட்சி சேர்மன் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, வடலுார் நகராட்சி அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலை துறை மூலமாக நடந்து வரும் திட்டப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை