மேலும் செய்திகள்
பஸ்சில் சிக்கி பெண் பலி
24-Aug-2025
திட்டக்குடி : திட்டக்குடி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று வரும்போது, வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயமடைந்தனர். திட்டக்குடி அடுத்த செவ்வேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இவரது துக்க நிகழ்ச்சிக்கு, சாத்தநத்தத்தில் இருந்து டாடா ஏஸ் வேனில் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் சென்றனர். துக்க நிகழ்ச்சி முடிந்து மதியம் 2:30 மணிக்குசாத்தநத்தம் புறப்பட்டனர். அப்போது, அதே பகுதியில் உள்ள சாலை வளைவில் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மின்கம்பம் சேதமானது. டிரைவர் நாவலுார் மணிகண்டன், 25; காயமின்றி தப்பினார். விபத்தில் சாத்தநத்தம் பெரியசாமி மனைவி சாந்தி, 45; ஜெயசங்கர் மனைவி சந்தியா, 36; தவசி மனைவி செல்லம்மாள், 36, உட்பட 18 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த திட்டக்குடி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், சாந்தி, சந்தியா, செல்லம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Aug-2025