பெண்ணிடம் தகராறு; 2 பேர் கைது
கடலுார்; கடலுார் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் பிரபு, 29. இவர், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், கடலுாரில் இருந்து நெல்லிக்குப்பம் செல்வதற்காக, பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அவருடன் தாய், தங்கை உள்ளிட்டோர் இருந்தனர்.அப்போது பஸ் நிலையத்தில் நின்றிருந்த திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்த முனுசாமி, 28, வல்லரசு,24, ஆகியோர், பிரபுவின் தங்கையை கிண்டல் செய்துள்ளனர். தட்டிகேட்ட பிரபுவை இருவரும் சேர்த்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து முனுசாமி, வல்லரசு இருவரையும் கைது செய்தனர்.