மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
12-Dec-2024
கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
20-Dec-2024
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பகல் 2:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, சோழன் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்தின்பேரில் நின்ற இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள் தாழநல்லூர் கணேசன் மகன் கரண், 20; செல்லவேல் மகன் விஷ்வா, 19, என்பதும், இருவரும் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி விற்க வைத்திருப்பது தெரிந்தது. இருவரிடம் இருந்து தலா 50 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து கரண், விஷ்வா இருவரை கைது செய்தனர்.
12-Dec-2024
20-Dec-2024