மேலும் செய்திகள்
கஞ்சா பதுக்கிய இருவர் கைது
04-Nov-2026
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் நேற்று (நவ.,18) ரோந்து சென்றனர். அப்போது, சாத்துக்கூடல் மேல்பாதி அம்பேத்கர் சிலை அருகே கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் சசி, 26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து தலா 5 கிராம் எடையில் 30 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், ஏ.வல்லியம் கிராமத்தில், கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்லம்பெருமாள் மகன் ஆறுமுகம்,28; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
04-Nov-2026