மேலும் செய்திகள்
1 கிலோ கஞ்சா பதுக்கல் கடலுாரில் 4 பேர் கைது
23-May-2025
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் மேல்பட்டாம்பாக்கம் அடுத்த மிளகாய்குப்பம் அய்யனார் கோவில் அருகே வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது சந்தேகபடும்படி நடந்து வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த அங்கப்பன் மகன் அருண்குமார்,22; சக்திவேல் மகன் மணிகண்டன்,24; என்பதும், 700 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
23-May-2025