உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது

பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்கை, திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் புதுப்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன், 52; இவர், கடந்த 4ம் தேதி வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு மீன் பிடிக்க வெள்ளாற்றுக்கு சென்றுள்ளார். மீன்பிடித்துக்கொண்டு 5ம் தேதி காலை வீட்டிற்கு வந்து பார்த்தப்போது, பைக்கை காணவில்லை.இதுகுறித்து, நடராஜன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பரங்கிப்பேட்டை அகரம் சக்தி நகர் 17 வயதுள்ள சிறுவன் மற்றும் திருவாரூர் மாவட்டம் நெய்விளக்குதோப்பு பகுதியை சேர்ந்த 16வயதுடைய சிறுவன் ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி