உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆடுகள் திருடிய 2 சிறுவர்கள் கைது

ஆடுகள் திருடிய 2 சிறுவர்கள் கைது

நெய்வேலி: ஆடுகள் திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார், குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசாமியை பிடிக்க வடலுாரை நோக்கி முன்தினம் நள்ளிரவில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வடலுார் ஆபத்தாரணபுரம் அருகே சந்தேகத்தின் பேரில், 2 சிறுவர்கள் பைக்கில் ஆட்டுக் குட்டிகளை ஏற்றிக்கொண்டு சென்றனர்.சந்தேகமடைந்த போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். இதில், வடக்கு வெள்ளூரை சேர்ந்த 16 வயது சிறுவன், கடலுார் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த 16 வயது சிறுவனும் சேர்ந்து வடக்கு மேலுார் கிராமம் செல்வராஜ் வீட்டில் 2 ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து, நெய்வேலி டஷன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து இரு சிறுவர்களை கைது செய்தனர். ஆடுகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ