உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் கம்பியில் சிக்கி 2 எருமைகள் இறப்பு

மின் கம்பியில் சிக்கி 2 எருமைகள் இறப்பு

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 2 எருமை மாடுகள், அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி இறந்தன.புதுச்சத்திரம் அடுத்த பூதங்கட்டியை சேர்ந்தவர் அல்லிமுத்து மனைவி சுமதி, 40. இவர் தனக்கு சொந்தமான இரண்டு எருமை மாடுகளை, நேற்று காலை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது அங்கே அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த எருமை மாடுகள், மின்சாரம் தாக்கி இறந்தன. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள், மின் வினியோகத்தை துண்டித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி