உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  லாட்டரி விற்ற 2 பேர் கைது

 லாட்டரி விற்ற 2 பேர் கைது

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் லாட்டரி விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை, வாத்தியாப்பள்ளி தெரு, ஆட்டோ ஸ்டேண்டு அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த நாட்றான் கிணற்று முடக்கு தெரு ஹபீப் நுார் முகமது, 44; அண்ணாநகர் அசேன் அலி, 59; ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1303 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், 1,170 ரூபாய் கைப்பற்றப்பட்டது. பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !