உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராவல் கடத்தல் விருதையில் 2 பேர் கைது

கிராவல் கடத்தல் விருதையில் 2 பேர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் வழியாக கிராவல் கடத்தி வந்த டிப்பர் லாரி, ஜேசிபி.,யை பறிமுதல் செய்த போலீசார், அதன் ஓட்டுனர்களை கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று மாலை வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆலடிரோடு முடக்கு வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி லாரியில் 3 யூனிட் கிராவல் மண் கடத்திச் சென்றது தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, லாரி மற்றும் மண் ஏற்றி ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், டிரைவர்கள் சின்னகண்டியங்குப்பம் வெங்கடேசன் மகன் தமிழ்ச்செல்வன், 36 மற்றும் , அன்புநகர் சின்னகாளை மகன் தினேஷ், 25, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ