மேலும் செய்திகள்
நள்ளிரவில் பைக் எரிந்து சேதம்: போலீஸ் விசாரணை
15-Oct-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, 2 கூரைவீடு எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கருவேப்பிலங்குறிச்சி அடுத்த பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி அலமேலு, 48; இவரது கூரை வீடு நேற்று பகல் 1:00 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி, அருகில் இருந்த ராமதாஸ் மனைவி சந்திரா, 45. என்பவரது கூரை வீட்டிற்கும் பரவியது. தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், இருவரது வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15-Oct-2025