உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடம் அருகே குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது

பெண்ணாடம் அருகே குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே குட்கா பதுக்கி வைத்து விற்ற வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் நேற்று காலை 10:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.அங்கு, விற்பனைக்காக 30 குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் சோலைமுத்து, 47; என்பவரை கைது செய்தனர்.இதேபோன்று, அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் இருந்த 28 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் கலியமூர்த்தி, 56; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி