உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

பைக் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

புவனகிரி: புவனகிரி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். கடலுார் மாவட்டம், புவனகிரியை அடுத்த ஆதிவராகநத்தம் (பெருமாத்துார்) எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர்கள் அரவிந்த், 20; தமிழேந்தன், 20; இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில் புவனகிரியில் இருந்து தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நெய்வேலியிலிருந்து சாம்பல் ஏற்றி வந்த லாரி ஒன்று, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அரவிந்த், தமிழேந்தன் ஆகிய இருவரும் பலத்த அடிபட்டு இறந்தனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகலறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்து, இறந்தவர்களின் உடலை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !