உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவருக்கு 28 மாதம் சிறை: விருத்தாசலம் கோர்ட் தீர்ப்பு

முதியவருக்கு 28 மாதம் சிறை: விருத்தாசலம் கோர்ட் தீர்ப்பு

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த போலீசாரை தாக்கிய வழக்கில், முதியவருக்கு 28 மாதம் சிறை தண்டனை விதித்து, கோர்ட் உத்தவிட்டது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மணலுார் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 76. இவர் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், விருத்தாசலம் கடை வீதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த போலீசாரை, போதையில் தாக்கினார்.இந்த வழக்கு விசாரணை, விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட் (1)ல் நடந்து வந்தது. விசாரணை நேற்று முடிந்த நிலையில், குப்புசாமிக்கு, 28 மாதம் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் அன்னலட்சுமி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ