உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரும்பு திருடிய 3 பேர் கைது

இரும்பு திருடிய 3 பேர் கைது

காட்டுமன்னார்கோவில்: இரும்பு வேலிகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப் இன்ஸ்பெக்டர் சஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் வீராணம் ஏரி கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சாக்கு மூட்டைகளுடன் வந்த 3 பேரை பிடித்து சோதனை நடத்தினர். அதில், பெரிய இரும்பினால் ஆன 3 தடுப்பு வேலிகள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், கலியமலை கிராமத்தைச் சேர்ந்த ரஜினி மகன் நித்திஷ், 20; ராஜேந்திரன் மகன் ஆகாஷ்,20; சக்திவேல் மகன் சச்சின், 19; என்பதும், வீராணம் ஏரிக்கரையில் விபத்தை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்த தடுப்பு வேலிகளை திருடியதையும் ஒப்புக் கொண்டனர். உடன், போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை