மேலும் செய்திகள்
என்.எல்.சி.,யில் தேசிய நிதித்துறை கருத்தரங்கம்
09-Dec-2025
நெய்வேலி: என்.எல்.சி., தகவல் தொடர்புத்துறை, மக்கள் தொடர்பு, சமூக மேம்பாடு மற்றும் நிர்வாகத் திறனில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய மக்கள் தொடர்பு சங்கத்தின் சார்பில், நிறுவனங்களின் நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் ஆக்கப்பூர்வமான மக்கள் தொடர்பு பணிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, ஆண்டுதோறும் தேசிய அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், 'வளர்ச்சியை மேம்படுத்துதல், விழுமியங்களைப் பாதுகாத்தல்' என்ற மையக்கருத்தில் கடந்த டிச.13 முதல் 15 வரை, 47 வது அகில இந்திய மக்கள் தொடர்பு மாநாடு நடைபெற்றது. இவ்விழாவில், என்.எல்.சி., நிறுவனம் தேசிய அளவில் மூன்று விருதுகளை பெற்றுள்ளது. இந்த விருதுகளை, உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்திய மக்கள் தொடர்பு சங்கத்தின் தேசியத் தலைவர் அஜித் பதக் மற்றும் பொதுச்செயலாளர் மூர்த்தி ஆகியோர் வழங்க, என்.எல்.சி., நிறுவன அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். முன்னதாக, கடந்த நவ., 28ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இந்திய மக்கள் தொடர்பு சங்கம் நடத்திய விருது வழங்கும் விழாவில், என்.எல்.சி., தகவல் தொடர்புத் துறை பொதுத்துறை நிறுவனங்களுக்கான பிரிவில் மூன்று விருதுகளை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் வீடியோ பிரிவில் 'தங்கம்' தொலைக்காட்சி விளம்பர வீடியோ பிரிவில் 'வெள்ளி' மற்றும் நிறுவனத்தின் உள்சுற்று இதழ் (தமிழ்) பிரிவில் 'வெண்கலப் பதக்கமும்' பெற்று அசத்தியது. விருதுகளை வென்ற என்.எல்.சி., தகவல் தொடர்புத்துறையின் பொதுமேலாளர் கல்பனா தேவி தலைமையிலான அதிகாரிகளை என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி வாழ்த்தி பேசுகையில்., என்.எல்.சி., தொடர்ந்து 12 வது ஆண்டாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான தேசிய விருதை வெல்வது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். அதேபோல், தகவல் தொடர்புத் துறையின் நவீனத் தொழில்நுட்ப முன்னெடுப்புகளையும், நிதித்துறையின் அர்ப்பணிப்புடனான ஆண்டறிக்கை வெளியீடும் பாராட்டுக்குரியவை,' என்றார்.
09-Dec-2025