உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார்-சென்னைக்கு 3 புதிய அரசு பஸ்கள்

கடலுார்-சென்னைக்கு 3 புதிய அரசு பஸ்கள்

கடலுார்: விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சென்னைக்கு (கிளாம்பாக்கம்) புதிய பஸ்களை அமைச்சர் பன்னீர்செல்வம் வடலுாரில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டம் சார்பில், கடலுாரில் இருந்து புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னை கிளாம்பாக்கம், சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரி, மரக்காணம் வழியாக கிளாம்பாக்கம், கடலுாரில் இருந்து மரக்காணம் வழியாக கிளாம்பாக்கம் வழித்தடங்களில், 3 புதிய அரசு பஸ்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. அதனை, வடலுாரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று, புதிய பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத், எஸ்.பி., ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை