உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 2 கோடி மோசடி வழக்கு ரவுடி உட்பட 3 பேர் கைது

ரூ. 2 கோடி மோசடி வழக்கு ரவுடி உட்பட 3 பேர் கைது

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ரூ. 2 கோடியை மோசடி வழக்கில் ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்தவர் அசோக்குமார்,32; பிரபல ரவுடியான இவருக்கு முத்தாண்டிக்குப்பம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. இவரது வங்கிக் கணக்கில் கடந்தாண்டு ஜூலையில் 50 லட்சம் ரூபாய் இருப்பு இருந்தது. திடீரென அவரது கணக்கில் பல தவணைகளில் 2 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர், அசோக்குமாரிடம் விளக்கம் கேட்டதற்கு ஷேர் மார்க்கெட்டில் இருந்து பங்கு தொகை வந்ததாக கூறினார். இதையடுத்து கணக்கில் இருந்த 2 கோடி ரூபாயை ஆன்லைன் மூலமாக நண்பர்கள் 7 பேருக்கு பிரித்து அனுப்பினார். இதையறிந்த வங்கி மேலாளர், அசோக்குமார் கணக்கை முடக்கினார். இவர் நடத்திய விசாரணையில், ேஷர் மார்க்கெட் மூலமாக பணம் வரவில்லை என்பது தெரிந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர், முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் அளித்ததும், அசோக்குமார் தலைமறைவானார். இந்நிலையில், முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று அசோக்குமாரை பிடித்து விசாரித்தனர். இதில், அசோக்குமாரும், சென்னையில் உள்ள ஜெரோதா டிரேடிங் ஷேர் மார்க்கெட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கலைச்செல்வன் என்பவரும் நண்பர்கள். கலைச்செல்வன் தான் பணிபுரிந்த நிறுவன வங்கிக் கணக்கின் ஆன்லைன் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி 2 கோடி ரூபாயை, அசோக்குமாருக்கு பல தவணையாக அனுப்பினார். இவர், தனது நண்பர்கள் கடலுார் செம்மங்குப்பம் அருண்குமார்,32; கீழக்கொல்லை உக்கரவேல்,34; நெய்வேலி கிருஷ்ணகுமார் உட்பட 7 பேரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியதும் தெரிந்தது. உடன், போலீசார், அசோக்குமாரை கைது செய்தனர். இவர் அளித்த தகவலின் பேரில், உக்கரவேல், அருண்குமார் ஆகியோரையும் கைது செய்து, பேர்பெரியான்குப்பம் தமிழ்ச்செல்வன், கிருஷ்ணகுமார் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி