சிதம்பரத்தில் போதை மாத்திரைகள் விற்பனை 3 வாலிபர்கள் கைது
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைநகரில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்தி மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்துள்ள வேளக்குடி மேம்பாலம் அருகில் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில அவர்களிடம் 40 கிராம் கஞ்சா பொட்டலங்களும், 110 போதை மாத்திரைகள் இருந்துத கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடலூர் பழையநகரம் சுனாமி நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ், 23; வேளக்குடியைச் சேர்ந்த ஆண்டன் பாலசிங்கம், 20; ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த இளவரசன், 24; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.