கீழணையில் இருந்து 30,000 கனஅடி நீர் வெளியேற்றம்
காட்டுமன்னார்கோவில் : காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால, அணைக்கரை கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அணைக்கரை கீழணை நீர்மட்டம் 7.4 அடியாக உள்ளது. கடந்த 12ம் தேதி கீழணையில் இருந்து உபரி நீராக கொள்ளிடம் ஆற்றில் 1200 கன அடியாக துவங்கி படிப்படியாக உயர்ந்து நேற்று காலை வரை 16,500 கன அடி அளவில் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.மேட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் 117.57 அடியாக உயர்ந்தது. அங்கிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால், அணைக்கரை கீழணைக்கு 30,000 கன அடி தண்ணீர் வந்தது. அந்த நீர், கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டது.