பெண்ணை தாக்கிய 4 பேர் கைது
விருத்தாசலம்: பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம், தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி மனைவி பவுனாம்பாள், 26; இவர், அதே பகுதியைச் சேர்ந்த மோனகரன், 55; என்பவர் வீட்டில் எலுமிச்சை பழம் பறித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மனோகரன், மனைவி கங்காதேவி, 48; ஆதரவாளர்கள் கம்மாபுரத்தைச் சேர்ந்த பானுபிரியா, 30; கார்குடல் கிராமம் மீனா, ஓட்டிமேடு கிராமம் அனிஷ், 25, ஆகியோர் பவுனாம்பாளை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், வழக்குப் பதிந்து மனோகரன், கங்காதேவி, மீனா, அனிஷ் ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.